CINEMA
சினிமாவில் இது வேண்டாமே… கோரிக்கை வைத்த பிரதீப் ரங்கநாதன்…
பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் நடிகர் மற்றும் youtuber ஆவார். 2015 ஆம் ஆண்டு வாட்ஸப் காதல் உட்பட பல குறும்படங்களை தயாரித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதன் மூலம் தனது சினிமா கேரியரை தொடங்கினார். இயக்கம் நடிப்பு எடிட்டிங் என பல பணிகளை சினிமாவில் செய்து வந்தார் பிரதீப் ரங்கநாதன்.
இவரது சில குறும்படங்களை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட ஜெயம் ரவி மற்றும் வேல் இன்டர்நேஷனல் ஒரு படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை கொடுத்தனர். அப்படி 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அதே திரைப்படத்தில் கிளைமாக்ஸ் இல் ஒரு சிறப்பு தோற்றத்திலும் பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்தார்.
அவரது இரண்டாவது திரைப்படம் ஆன 2022 ஆம் ஆண்டு லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கினார் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்ததால் வெளியான உடனே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. யாரும் எதிர்பாரா வகையில் அனைவரின் பாராட்டுகளையும் இத்திரைப்படம் பெற்றது.
லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் பிரபலமானார். இந்த படத்தில் நாயகனாக நடித்து நடிகராகவும் அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இத்திரைப்படம் இந்த வருடத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பிரதீப் ரங்கநாதன் சினிமாவில் உதவி இயக்குனர்கள் உள்ளே நுழைவதற்கு முதலில் ரெக்கமண்டேஷன் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். அது சினிமாவிற்கு வேண்டாமே. திறமை இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பளியுங்கள் என்னிடம் வரும் உதவி இயக்குனர்கள் எல்லோரும் திறமையால் வந்தவர்கள் தான் என்று கோரிக்கையை வைத்துள்ளார் பிரதிப் ரங்கநாதன்.