CINEMA
படத்துக்கு கதை தேவையில்லை.. விஜய் சார் இருந்தாலே போதும்.. துப்பாக்கி பட ரீல் தங்கை பேட்டி..!!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் விஜய் அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை தீப்தி தியேட்டர் வாசலில் வைத்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, துப்பாக்கி படத்தில் விஜய் சாரோட சிஸ்டரா நான் நடிச்சிருக்கேன். என்னோட பெரிய லக். என் லைஃப்ல நான் அவர் கூட நடிக்க முடிஞ்சது. இன்னைக்கு ரொம்ப எமோஷனலா இருக்கேன்.
எனக்கு அவர் கூட நிறைய மெமரிஸ் இருக்கு. இந்த படம் விஜய் சார் எந்த ப்ரமோஷன் பண்ணல. கேரளாவுல அதிகாலை 4 மணி ஷோ போயிட்டு இருக்கு. எங்கேயுமே டிக்கெட் கிடைக்கல. அவர் கூட நான் ஒரு சீன் நடிச்சேன். என்னை கடத்துற சீன். சந்தோஷ் சிவன் சார் கேமராமேன். அவரு என்கிட்ட நீங்க பயப்படனும் அப்படின்னு சொன்னாரு.
அப்போ நான் சொன்னேன் எப்படி பயப்படுறது? விஜய் சார் இருக்காங்க படத்துல. அவரு வந்து என்னை காப்பாற்றுவார் என்று எனக்கு தெரியும். எதுக்கு நான் பயப்படனும் அப்படின்னு சொன்னேன். என்ன பொருத்தவரைக்கும் விஜய் சார் மட்டும் இருந்தா போதும். என்ன படம், என்ன சாங், என்ன ட்ரெய்லர் அது எதுவுமே பரவால்ல. விஜய் சார் மட்டும் தான் பாக்கணும் என பேசியுள்ளார்.