CINEMA
ரஜினிகாந்த் எதற்காக அடிக்கடி இமயமலைக்கு செல்கிறார்…? இப்படி ஒரு அதிசயம் நடந்திருக்கா…?
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகரும் இந்தியாவின் முக்கிய பிரபலமும் ஆனவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது ஸ்டைலுக்காகவும் நடிப்பிற்காகவும் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். இவரை தலைவர் என்று மக்கள் அன்போடு அழைக்கின்றார்கள். தற்போது 75 வயதை கடந்த போதிலும் இன்றளவும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவின் மீது பற்று கொண்டு ஓயாமல் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்து மதத்தின் மீதும் ஆன்மீகத்தின் மீதும் அதிக பற்று கொண்டவர். பாபாவை பின்பற்றுபவர். இவர் அடிக்கடி இமய மலைக்கு செல்லும் வழக்கத்தை கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் எதற்காக அடிக்கடி இமயமலைக்கு செல்கிறார் அதற்கு பின்னால் நடந்த அதிசயம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலையின் மீது அதிக பற்று கொண்டதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான அதிசய சம்பவம் இருக்கிறது. அது என்னவென்றால் ஒரு முறை ரஜினிகாந்த் அவர்கள் இமயமலைக்கு சென்று அங்கே மேல் இருக்கும் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் அணிந்திருந்த ருத்ராட்சம் தண்ணீரில் தொலைந்து விட்டதாம். உடனே மிகவும் மனதால் வருந்தி இருக்கிறார் ரஜினிகாந்த். இமயமலையில் வந்து நம்முடைய ருத்ராட்சம் தொலைந்து விட்டதே என்று வருத்தத்தில் இருந்திருக்கிறார்.
உடனே வருத்தத்துடன் தங்கி இருந்த ஆஸ்ரமத்திற்கு நடந்து வந்த ரஜினிகாந்த் அவர்களின் எதிரே ரிஷிகள் வந்திருக்கின்றனர். அவர்கள் அவரிடம் வந்து கவலைப்படாதே நீ தொலைச்சது உனக்கு திரும்ப கிடைக்கும் அப்படின்னு சொல்லிட்டு சென்றுள்ளனர். இதை கேட்டதும் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒண்ணுமே புரியவில்லையாம். சரி என்று ஆசிரமத்திற்கு வந்திருக்கிறார்.
ஆஸ்ரமத்திற்கு வருவதற்கு முன்னாலே அங்கு ஒரு வயதான பெண்மணி கையில் ருத்ராட்சத்துடன் ரஜினிகாந்த் அவர்களிடம் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்திருக்கிறார். உடனே அவருக்கு எல்லாமே பிடிப்பட்டிருக்கிறது. அங்கே நமது ருத்ராட்சம் தொலைந்தது அது ரிஷிகள் உனக்கு திரும்ப கிடைக்கும் அப்படின்னு சொன்னதுனால அங்கு தொலைந்த ருத்ராட்சம் மீண்டும் எனக்கு கிடைத்து விட்டதே என்று ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார் ரஜினிகாந்த். இப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்ததால் தான் அவருக்கு இமயமலை மீது அதிகப்பற்று ஏற்பட்டு அடிக்கடி இமயமலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.