விவேகானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் பின்னணி பாடகர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இவர் தமிழ்நாட்டில் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர். சென்னையில் பணிபுரியும் போது மெட்ராஸ் ஹியூமர் கிளப் ஒன்றில் சேர்ந்து அங்கு காமெடி செய்து வந்தார் விவேக். பின்னர் அந்த கிளப்பில் நிறுவனர் பி ஆர் கோவிந்தராஜன் விவேகை கே பாலச்சந்திரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
1987 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் சுகாசினியின் சகோதரனாக நடிக்க வாய்ப்பு அளித்தார். அப்படி துணை வேடங்களில் நடித்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் விவேக். 1980களில் துணை நடிகராக நடித்து வந்த விவேக் 1990களின் பிற்பகுதியில் நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார்.
காதல் மன்னன், உன்னை தேடி, வாலி, பூமகள் ஊர்வலம், ஆசையில் ஒரு கடிதம் போன்ற திரைப்படங்கள் இவருக்கு நகைச்சுவையில் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்ததாக முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார் விவேக். குஷி, பிரியமானவளே, மின்னலே, டும் டும் டும் ஆகிய திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்று தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் விவேக்.
பின்னர் சமூக நீதி கருத்துக்களை நகைச்சுவையில் கூறுவதன் மூலம் பிரபலம் அடைந்த விவேக் தன் நகைச்சுவைக்காக சிறந்த நடிகருக்கான விருது போன்ற பல விருதுகளை வென்றுள்ளார். ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றுபவர் விவேக். தன்னால் முடிந்த வரையில் தன் வாழ்நாளில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டவர் விவேக்.
அப்படி நற்பண்புகளைக் கொண்ட விவேக் 2021 ஆம் ஆண்டு யாரும் எதிர்பாரா வகையில் ஹார்ட் அட்டாக்கினால் உயிரிழந்தார். அப்படி அவர் இறப்பதற்கு முன்பு கடைசியாக பேசிய ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பது என்னவென்றால், இயக்குனர் கே பாக்யராஜ் அவர்கள் இந்திய சினிமாவில் திரைக்கதை வசனம் ஆகியவற்றில் முக்கியமான கலைஞராக திகழ்கிறார். அவர் தற்போது KPR Show என்ற youtube சேனலை தொடங்க இருக்கிறார். அந்த youtube சேனலில் தனது சினிமா பயணங்களை பற்றி பகிர்ந்து கொள்ள இருக்கிறார். அவரது பிறந்தநாளுக்கு என்னோட வாழ்த்துக்களும் அவரது youtube சேனலுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசி இருக்கிறார். அதுவே விவேக் மறைவதற்கு முன்பு பேசிய கடைசி வீடியோ ஆகும்.