பெரும் பரபரப்பு..! TVK உறுப்பினர் அட்டையை கிழித்து எறிந்துவிட்டு… விஜய் கட்சியில் இருந்து மொத்தமாக விலகினர்…!!

By Soundarya on கார்த்திகை 17, 2025

Spread the love

தமிழகம் முழுவதும் நேற்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் SIR-க்கு எதிராக போராட்டம் நடந்தது. காலையில் போராட்டம் நடந்த நிலையில், மாலையில் அந்த கட்சியில் இருந்து விலகி பல இளைஞர்கள் திமுகவில் இணைந்துள்ளதால் குழப்பம் நிலவியுள்ளது. அந்த இளைஞர்கள் தவெக உறுப்பினர் அட்டையை உடைத்தும், புஸ்ஸி ஆனந்துடன் எடுத்துக்கொண்ட போட்டோவை கிழித்தும் போட்டனர்.

இந்த வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆன நிலையில், இது திமுகவின் அரசியல் நாடகம் என்று  தவெகவினர் பதிலடி கொடுக்கின்றனர். ஆனால் என்ன நடந்தாலும் சரி விஜய் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து பயணம் செய்து வருகிறார்..