நாங்க என்ன பைத்தியமா..? கட்சியை கலைத்துவிடுவேன்…. பரபரப்பை கிளப்பிய சீமான்…!!

By Soundarya on கார்த்திகை 17, 2025

Spread the love

தஞ்சை மாவட்டம் பூதலூரில் நாம் தமிழர் கட்சியின் தண்ணீர் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. அதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகையில், ” நாங்கள் முன்னெடுக்கும் நிகழ்வுகளை பைத்தியம் என்பது போல இங்குள்ள பல பைத்தியங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பைத்தியங்கள் அல்ல. பைத்தியங்களாக உள்ளவர்களுக்கு வைத்தியம் பார்க்க வந்த வைத்தியர்கள். சீமான் மரத்தோடு பேசுகிறார். அதற்கு என்ன ஓட்டு இருக்கிறதா என்று சொல்கிறார்கள்.

மரத்திற்கு ஓட்டு இல்லை உயிர் இருக்கிறது. தண்ணீரிடம் வாக்கு இல்லை. வாழ்க்கை இருக்கிறது. எங்கள் அரசியல் வேறு உங்கள் அரசியல் வேறு. மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரும் .ஐரோப்பிய நாடுகளில் தண்ணீர் வைத்துள்ளார்களோ அந்த நாடுகள் தான் பணக்காரன் நாடுகள். ஐரோப்பிய நாடுகள் நீர் பொருளாதரத்திற்கு வந்துவிட்டது. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் விற்பனைக்கு தடை. நான் எடுத்துள்ள கருத்தியலில் வென்றால் கட்சியை கலைத்து விடுகிறேன் என்று பேசியுள்ளார்.