“என் செருப்போட சைஸ் 41” ரெடியா இருக்கீங்களா..? விஜய் ரசிகருக்கு தரமான பதிலடி கொடுத்த குஷ்பூ..!!

By Soundarya on கார்த்திகை 17, 2025

Spread the love

173-வது படத்தை ராஜ்கமல் ஃபிலிம் சார்பாக நடிகர் கமலஹாசன் தயாரித்து சுந்தர் சி இயக்குவதாக இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக சுந்தர் சி அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். சுந்தர் சி யின் விலகல் குறித்து பல தகவல்கள் பரவி வருகிறது. இதனால் சோசியல் மீடியாவில் அவரை பற்றி கேலி கிண்டல்கள் செய்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் குஷ்பூவை  தொடர்பு படுத்தியும் ஆபாசமாக கிண்டல் நடந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை குஷ்பூ தன்னுடைய எக்ஸ் தலத்தில் இதற்கு அதிரடியாக பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது .

அதில் விஜய் ரசிகர் ஒருவர், ” ஒரு வேலை படத்தில் ஒரு பாடலுக்கு குஷ்பூ நடனமாட குஷ்பூவை கேட்டிருப்பாரோ” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு குஷ்பூ இல்லை உங்கள் வீட்டில் யாராவது ஆட வைக்கலாமா என்று நினைத்தோம் என்று பதிலடி கொடுத்திருந்தார். மேலும் மற்றொரு பதிவில் “என் செருப்பின்  அளவு 41. அடி வாங்க தயாரா என்று கேட்டுள்ளா.ர் இதனை அடுத்து குஷ்புவின் இந்த பதிலுக்கு பிறகு இணையவாசிகள் அந்த பதிவுகளை நீக்கி உள்ளார்கள்.