வட்டாட்சியரை கடித்து குதறிய நாய்… 3 நாளில் விளக்கமளிக்க நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்…!!

By Soundarya on கார்த்திகை 17, 2025

Spread the love

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் வட்டாட்சியராக பணிபுரிந்து வருபவர் மெசியாதாஸ். இவர் நேற்று    சிவகங்கை திருப்பத்தூர் சாலையில் நடைப்பயிற்சி சென்றுவிட்டு  தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த வெறிநாய் ஒன்று  அவருடைய காலை கடித்துக் குதறியது. வெறிநாய் கடித்து  காயமடைந்த அவர் உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு சிவகங்கை நகர் பகுதியில் பொதுமக்கள் குழந்தைகளை தெருநாய்கள் அச்சுறுத்துகின்றதா என்று அரிய மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நகரின் பல பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்பு கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் 3 நாளில் விளக்கமளிக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.