செங்கல்பட்டு மாவட்டம் கள்ளிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ரோஸ்மேரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவர் தனது மனைவி நதியா மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அன்பு மணிக்கும் ரோஸ்மேரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதனை அறிந்த ராஜதுரை இருவரையும் கண்டித்துள்ளார். மேலும் வேறு வீட்டிற்கு குடியேறுவதற்காக அட்வான்ஸ் பணம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்து தூங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ரோஸ்மேரியும் பிள்ளைகளும் வீட்டில் இல்லாததை கண்டு கோபமடைந்த ராஜதுரை கணபதியிடம் சென்று எனது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டிற்கு வரவில்லை என்றால் அதற்கு முழு காரணம் நீ தான்.
உன்னை சும்மா விட மாட்டேன் என கூறியுள்ளார். இதனையடுத்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இருப்பினும் அவர்களை கண்டுபிடிக்க முடியாததால் ராஜதுரை கணபதியின் வீட்டிற்கு சென்று அவரை சமாதானப்படுத்துவது போல பேசி நைசாக மது குடிக்கலாம் என கூறி ஏரி கரைக்கு அழைத்து சென்றுள்ளார்.
போதை தலைக்கேறிய நிலையில் கணபதி ராஜா துறையிடம் நானும் உனது மனைவியும் நான்கு மாதங்களாக கள்ளத்தொடர்பில் பழகி வருகிறோம் என கூறியுள்ளார். இதில் கோபமடைந்த ராஜதுரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணபதியை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜதுரையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…