“உன் மனைவியும், நானும் அடிக்கடி…” போதையில் வம்பிழுத்த திருமணமான வாலிபர்…. பிளான் போட்டு தீர்த்து கட்டிய நபர்…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2025

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் கள்ளிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ரோஸ்மேரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவர் தனது மனைவி நதியா மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அன்பு மணிக்கும் ரோஸ்மேரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனை அறிந்த ராஜதுரை இருவரையும் கண்டித்துள்ளார்.  மேலும் வேறு வீட்டிற்கு குடியேறுவதற்காக அட்வான்ஸ் பணம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்து தூங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ரோஸ்மேரியும் பிள்ளைகளும் வீட்டில் இல்லாததை கண்டு கோபமடைந்த ராஜதுரை கணபதியிடம் சென்று எனது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டிற்கு வரவில்லை என்றால் அதற்கு முழு காரணம் நீ தான்.

   

உன்னை சும்மா விட மாட்டேன் என கூறியுள்ளார். இதனையடுத்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இருப்பினும் அவர்களை கண்டுபிடிக்க முடியாததால் ராஜதுரை கணபதியின் வீட்டிற்கு சென்று அவரை சமாதானப்படுத்துவது போல பேசி நைசாக மது குடிக்கலாம் என கூறி ஏரி கரைக்கு அழைத்து சென்றுள்ளார்.

   

போதை தலைக்கேறிய நிலையில் கணபதி ராஜா துறையிடம் நானும் உனது மனைவியும் நான்கு மாதங்களாக கள்ளத்தொடர்பில் பழகி வருகிறோம் என கூறியுள்ளார். இதில் கோபமடைந்த ராஜதுரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணபதியை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜதுரையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.