காஞ்சிபுரம் மாவட்டம் கண்ணன் தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார்(25). இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக மகேஷ் குமாரும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் 22 வயது இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மகேஷ் குமார் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தார். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் அவரை திருமணம் செய்து கொள்ள மகேஷ் குமார் சம்மதித்தார்.
நேற்று குலதெய்வ கோயிலில் இருவருக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. முந்தைய நாள் இரவே திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மகேஷ் குமாரின் பெற்றோர் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்தனர். அப்போது மகேஷ் குமார் தூக்கில் தொங்கியதைக் கண்டு கதறி அழுதனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மகேஷ் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
