பல ஆண்டுகால கனவை நிறைவேற்றிய நடிகர் முத்துக்காளை…. குவியும் வாழ்த்துகள்…!!

By Devi Ramu on ஐப்பசி 25, 2025

Spread the love

பிரபல நகைச்சுவை நடிகரான முத்துக்காளை பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். வடிவேலு உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் சண்டை கலைஞராக சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்த முத்துக்காளை நடிப்பில் தனக்கென தனி முத்திரை பதித்தார்.

சினிமாவுக்கு வந்த பிறகு முத்துக்காளை பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் இளங்கலை வரலாறு பட்டம் பெற்று முதுகலை பட்டத்தையும் பெற்றார். தற்போது நீண்ட போராட்டத்திற்கு பிறகு முத்துக்காளை தனது சொந்த ஊரான சங்கம் பட்டியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.