“ப்ளீஸ் வேண்டாம்… விட்டுடுங்க பிரதீப்”…. அறைக்கு அழைத்து வந்த காதலன்… கத்தியால் குத்திவிட்டு லாரியில் பாய்ந்து தற்கொலை…. ஓசூரில் அறைக்குள் அரங்கேறிய திடுக்கிடும் ரத்தக் கொலை…..!

By Nanthini on ஐப்பசி 26, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியை கத்தியால் குத்திவிட்டு, காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கலேந்திராவைச் சேர்ந்த பிரதீப் (21), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜி.மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் திவ்யா ஜெயஸ்ரீ (20) என்பவரைக் காதலித்து வந்த நிலையில், சம்பவத்தன்று அவரைத் தான் தங்கியிருந்த அறைக்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த பிரதீப், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திவ்யா ஜெயஸ்ரீயை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அதிர்ச்சியில் அறையைவிட்டு வெளியேறிய பிரதீப், ஓசூர் – பாகலூர் சாலையில் எதிரே வந்த லாரியின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

   

இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பிரதீப்பை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இதுகுறித்துத் தகவலறிந்த பாகலூர் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, திவ்யா ஜெயஸ்ரீயின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகக் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

இதனிடையே, மருத்துவமனையில் உயிரிழந்த பிரதீப்பின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காதலியைத் தீர்த்துக்கட்டிய காதலனும் தற்கொலை செய்துகொண்ட இந்தச் சம்பவம் குறித்துப் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.