ரூ.100 கோடி ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி கைது…. மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்…. தமிழக அரசியலில் வெடித்தது புதிய புயல்….!

By Nanthini on ஐப்பசி 26, 2026

Spread the love

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் வெளியிட்டுள்ள கண்டனத்தில், அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாகவே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த நிலையிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், மாநிலத்தில் சந்தி சிரிக்கக் கூடிய சட்டம்-ஒழுங்கின் அவலட்சணத்தையும், நிர்வாகச் சீர்கேட்டையும் மறைப்பதற்காகவே ஆளும் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயல்வதாக விமர்சித்துள்ளார்.

   

மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்படி எதிர்கொள்வார் என்று குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், இத்தகைய கைது நடவடிக்கைகளின் மூலம் மக்களின் கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் தவெக அரசின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்றும் எச்சரித்துள்ளார்.

   

முன்னாள் அமைச்சரின் கைது மற்றும் தலைவர்களின் இந்த அதிரடியான கருத்து மோதல்கள் தற்பொழுது தமிழக அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளதுடன், ஆளும் அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.