சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் வித்தியாசமான சம்பவங்களை செய்து வருகிறார்கள் .அந்த வகையில் கேரளாவில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் முதலில் ஒரு அப்பாவி பூனையை கொடூரமாக கொன்று பிறகு அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில் 32 வயது இளைஞர் ஒருவர் முதலில் பூனைக்கு உணவு அளிக்கிறார். பிறகு அதை கொடூரமாக கொன்றது மட்டுமல்லாமல் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிலும் வைத்துள்ளார்.
இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து விலங்கு உரிமை ஆர்வலர் காவல் துறையில் புகார் அளித்தார். விலங்குகளை மனிதாபிமானற்ற முறையில் நடத்துவது குற்றமாக கருதப்படும் நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
