தினமும் அந்த விஷயம் பண்ணும் போது பாக்கியராஜை தான் நினைப்பேன்.. மனம் திறந்த நடிகை ஊர்வசி..!

By Divyamayakannan on ஆவணி 7, 2025

Spread the love

2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கான தேசிய விருது கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த 71-ஆவது தேசிய விருதில், மலையாளத்தில் உள்ளொளுக்கு படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது நடிகை ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறந்த நடிகருக்கான விருது எப்படி ஷாருக்கானுக்கு தேர்வு செய்யப்பட்டது என கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் நேர்காணலில் பேசிய ஊர்வசி திரைப்பட பயணம் குறித்து விரிவாக பேசி இருக்கிறார். அதில், முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நான் மிக மெலிதாக இருந்தேன். அப்படத்தில் விருப்பமே இல்லாமல் தான் நடித்தேன், பாக்கியராஜ் அவரே சேலை கட்டி எப்படி நடக்க வேண்டும் என்று நடந்து காட்டுவார். ஒவ்வொரு காட்சியிலும் சிரிப்பது அழுவது என்ற பல விஷயங்களை சொல்லிக் கொடுத்துள்ளார். எனக்கு நிறைய முயற்சிகளை எடுத்துள்ளார்

   

முக்கியமாக என் பெயரை திரையில் போடும்போது என்றும் உங்கள் ஆதரவை நாடும் ஊர்வசி என்றுதான் போடுவேன் என்று போட்டார். படத்தில் நடிக்கும் போது நான் மிகவும் சேட்டை செய்வேன். இதுவே வேற யாராவது இருந்திருந்தால் என்னை படத்திலிருந்து நீக்கி விரட்டி விட்டிருப்பார்கள். ஆனால் பாக்கியராஜ் எனக்கான இடத்தை கொடுத்து என்னை நடிக்க வைத்தார். மேலும் இன்றுவரை நான் மேக்கப் போடும்போதெல்லாம் எனக்கு அவர் தான் நினைவுக்கு வருவார் என ஊர்வசி கூறியுள்ளார்.