சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரயில் பயன்படுத்தப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்ற இணைக்கும் இரு-வழித்தடங்கள் மூலம் தினந்தோறும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். பயணிகள் எளிதாக செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்று முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, 50% சலுகையுடன் மெட்ரோ ரயில் டிக்கெட் “ஊபர் செயலி” மூலம் பெறலாம். மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லவும், திரும்பவும், பயண கட்டணத்தில் 50% சலுகை உண்டு. ஆட்டோ, கார், டூவீலர் முன்பதிவு செய்யும் ஊபர் செயலிலேயே க்யூ.ஆர்.கோடை(QR Code)பயன்படுத்தி, ரயில் டிக்கெட்டையும் முன் பதிவு செய்யலாம்.
டெல்லிக்கு அடுத்து மெட்ரோ டிக்கெட்டுகளை, ஊபர் செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதியை சென்னை மாநகரம் பெற்றிருக்கிறது.
