ட்விட்டரில் உள்ளது போல இன்ஸ்டாகிராமிலும் ரீபோஸ்ட் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் வலைத்தளம் உலகம் முழுவதும் 200 கோடி கணக்குகள் உள்ளனவாம் . இந்தியாவில் சமூக வலைத்தளத்தில் இன்ஸ்டாகிராமே பெரும் வளர்ச்சியை அடைந்து வருகிறது. தற்போது ட்விட்டரில் உள்ளது போல இன்ஸ்டாகிராமிலும் ரீபோஸ்ட், எமோஜியை பதிவிட்டு சேமித்துக் கொள்ள புதிய ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.
லைக், கமெண்ட், ரீபோஸ்ட், ஷேர் ஆகியவற்றை இன்ஸ்டாகிராமிலும் புதிய வசதியாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்குப் பிடித்த ரீல்ஸ் அல்லது பதிவினை ரீபோஸ்ட் செய்தால் அது உங்களது நண்பர்களது ஃபீடில் வரும். உங்களது கணக்கில் பதிவுகள் ரீல்ஸ்க்கு அருகில் ரிப்போர்ட் என்ற தனி ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷன் மூலம் நீங்கள் என்னென்ன ரீபோஸ்ட் செய்து உள்ளீர்கள் என்று பார்த்துக் கொள்ளலாம், மிகவும் உதவிகரமாக இருக்கும் என மெட்டா நிறுவனம் சிந்தித்துள்ளது. இதனால் ஒருவர் உங்களைப் பின் தொடராமலேயே உங்கள் பதிவுகளை பார்க்க முடியும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
