கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகிலுள்ள நாகமங்கலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்காக லாளிக்கல் பகுதியில் கட்டப்பட்ட விடுதியில், குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரத்தில் கைதான பெண்ணின் ஆண் நண்பர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
இந்த விடுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர். கடந்த நவம்பர் 1-ஆம் தேதி, விடுதியின் ஒரு அறையின் குளியல் அறையில் ஒடிசாவைச் சேர்ந்த 22 வயது நீலுகுமாரி குப்தா என்பவர் ரகசிய கேமரா பொருத்தியது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது ஆண் நண்பரான ரவி பிரதாப்சிங் கேமரா பொருத்த சொன்னதாக கூறியுள்ளார். நேற்று காலை டெல்லி சென்ற தனிப்படை போலீசார் ரவி பிரதாப்சிங்கை கைது செய்து விமானம் மூலம் உத்தனப்பள்ளிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
