தெலுங்கானா மாநிலம் கம்பம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேக் கவுஸ்(28). இவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வேற்று மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சத்யம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் ஷேக்கின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதனை அறிந்த ஷேக் இருவரையும் கையும் களவுமாக பிடித்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அவர்களது காதலை ஒப்புக்கொள்ள வைத்தார்.
பின்னர் ஷேக் பாரம்பரிய முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். நேற்று முன்தினம் வீடியோ அழைப்பு மூலம் நண்பர்களை தொடர்பு கொண்ட ஷேக் நடந்த விஷயத்தை கூறிவிட்டு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் ஷேக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
