கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தக நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான ஹரிதாஸ் என்ற இளைஞர், கார் டிரைவராகப் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கும், ஏற்கனவே திருமணமான கவியரசி என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கவியரசிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஹரிதாஸின் வற்புறுத்தலின் பேரில் அவர் தனது கணவரைப் பிரிந்து ஹரிதாஸுடன் வெளியேறியுள்ளார்.
இருவரும் திருப்பூருக்குச் சென்று திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், பின்னர் சிதம்பரம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதற்கிடையில், கவியரசியின் முதல் கணவர் செல்வராஜ் அவரைத் தொடர்பு கொண்டு, “நீ யாரிடம் வேண்டுமானாலும் செல், ஆனால் என் குழந்தைகள் எனக்கு வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனால் மனம்மாறிய கவியரசி, குழந்தைகளைத் தனது முதல் கணவரிடம் ஒப்படைத்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு விடுதியில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.
குழந்தைகளை ஒப்படைக்கச் சென்ற கவியரசி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், அவர் மீண்டும் முதல் கணவருடனே சென்றுவிடுவாரோ என்ற அச்சமும், மன உளைச்சலும் ஹரிதாஸிற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த ஹரிதாஸ், தான் தங்கியிருந்த விடுதி அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கவியரசி திரும்பி வந்து பார்த்தபோது, அறை உள்பக்கம் தாழிடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து ஊழியர்களின் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது ஹரிதாஸ் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஹரிதாஸின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான துல்லியமான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலியுடன் விடுதியில் தங்கியிருந்த இளைஞர், அவர் பிரிந்து செல்வார் என்ற பயத்தில் தற்கொலை செய்துகொண்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…