ஐயோ கொடுமையே… மது பாட்டிலுக்காக அண்ணனை… இரும்பு ராடால் அடித்துக் கொன்ற தம்பி… சடலத்தின் அருகில் தூங்கிய கொடூரம்… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 2, 2026

Spread the love

மதுரை கருப்பாயூரணி, ஒத்தவீடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பாயி. இவரின் மகன்களான அழகர் (30) மற்றும் கணேசன் இருவரும் கடந்த அக்டோபர் 31-ம் தேதி இரவு வீட்டின் அருகே ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, தம்பி கணேசன் வாங்கி வைத்திருந்த மது பாட்டில்களில், அதிக போதையில் இருந்த அண்ணன் அழகர் கூடுதலான பாட்டில்களைக் குடித்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் கடும் ஆத்திரமடைந்த கணேசன், வீட்டிலிருந்த இரும்பு ராடை எடுத்து அழகரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அழகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலைக்குப் பயன்படுத்திய இரும்பு ராடை வீட்டில் மறைத்து வைத்த கணேசன், அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்ததால் தப்பியோட முடியாமல் வீட்டின் வாசலிலேயே தூங்கிவிட்டார்.

   

உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த தாய் கருப்பாயி காலையில் வீடு திரும்பியபோது, மூத்த மகன் அழகர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பைக் கண்டு அதிர்ந்து போய் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து விரைந்து வந்த அண்ணா நகர் காவல்துறையினர், அழகரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த தம்பி கணேசனைப் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்திய இரும்பு ராடையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.