விபத்தா? அஜாக்கிரதையா?… நள்ளிரவில் புல்லட்டில் பறந்த வாலிபருக்கு நேர்ந்த சோகம்… நெஞ்சை உலுக்கும் தருணம்… வெளியான அதிர்ச்சி சிசிடிவி…!!

By Gayathri on கார்த்திகை 2, 2026

Spread the love

தார்வாட் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த அபினவ் சம்ப்ராணி என்ற இளைஞர், ஞாயிற்றுக்கிழமை இரவு அங்குள்ள சாய்பாபா கோயில் வழியே தனது இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் கட்டுப்பாடு தவறி சாலையில் நிலைதடுமாறி விழுந்ததில் அவருக்குத் தலையிலும் உடலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த விபத்துக் காட்சிகள் பதிவாகியுள்ளன.

விபத்தைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக தார்வாட் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக அவர் ‘கிம்ஸ்’ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்; அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக தார்வாட் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.