“25 பெண்கள்.. 3 ஆண்டுகள்..! ஆபாச வீடியோ காட்டி இளம்பெண்களுக்கு டார்ச்சர்.. காமுகனின் சுயரூபத்தை அம்பலப்படுத்திய மது போதை… பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on பங்குனி 30, 2026

Spread the love

கோவா மாநிலத்தைச் சேர்ந்த சோஹம் நாயக் (22) என்ற இளைஞர், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 25-க்கும் மேற்பட்ட இளம்பெண்களைக் காதல் வலையில் வீழ்த்திப் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், மிரட்டவும் அவர்களின் அந்தரங்கக் காட்சிகளை ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார். இதனால் அச்சமடைந்த பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் தவித்த நிலையில், இந்த விவகாரம் தற்செயலாக வெளிச்சத்திற்கு வந்தது. சோஹம் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, போதையில் தான் எடுத்து வைத்திருந்த ஆபாச வீடியோக்களை அவர்களிடம் காட்டிக் கர்வத்துடன் உளறியுள்ளார்.

இந்த அதிர்ச்சிகரமான தகவல் காட்டுத்தீ போலப் பரவியதால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சோஹமைக் கைது செய்து, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் வீடியோக்களைப் பறிமுதல் செய்து தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். கைதான சோஹம், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சுஷாந்த் நாயக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவ்வளவு காலம் இந்தச் சம்பவம் வெளியே தெரியாமல் இருந்தது அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.