பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்… அருகே அமர்ந்து வாலிபர் செய்த கொடூரம்… அடுத்து நடந்த பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on தை 2, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் உத்தரக்கன்னடா மாவட்டம் கார்வாரிலிருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து ஒன்று அங்கோலா பகுதியை நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் இளம்பெண் ஒருவர் தனது சகோதரருடன் பயணித்துள்ளார். அதில் அந்த பெண்ணின் சகோதரருக்கு ஜன்னல் இருக்கை வேண்டும் என்று கூறி இருவரும் வெவ்வேறு இருக்கையில் அமர்ந்தனர். இந்நிலையில் பேருந்து புறப்பட்டதும் அந்த இளைஞர் தூங்க ஆரம்பித்துள்ளார். அப்போது அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே 28 வயதுடைய வாலிபர் ஒருவர் வந்து அமர்ந்துள்ளார். பின்னர் சிறிது தூரம் பேருந்து சென்றதும் அந்த வாலிபர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதில் தூங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண் தீரென்று விழித்துப் பார்த்தார். அப்போது அந்த வாலிபர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்த இளம் பெண் உடனடியாக தன்னுடைய செல்போனை எடுத்து அங்கு நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்தார். அதன் பிறகு பேருந்தில் இருந்து இறங்கி செல்ல முயன்ற வாலிபரை அந்த இளம் பெண் தடுத்து நிறுத்தி கையால் சரமாரியாக தரம் அடி கொடுத்துள்ளார். மேலும் அந்த வாலிபரை தாக்கியதை இளம் பெண் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார். அது தற்போது வேகமாக வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த அங்கோலா போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.