கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்ஜிஆர் நகர் மேம்பாலத்தில் கொட்டுகாரம்பட்டி பகுதியில் இருந்து 23 பேரை ஏற்றிக்கொண்டு இன்று காலை தனியார் ஷூ கம்பெனி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தை கல்லாவி பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் (51) என்பவர் ஓட்டி சென்றார். ஊத்தங்கரை நாட்டான் கொட்டாய் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் முந்த முயன்றது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் எளிய தொடங்கியதும் பேருந்து மீதும் தீ பரவியுள்ளது. சிறிது நேரத்தில் தீ அனைத்து இடங்களிலும் பரவியது.
இதனைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியே உயிர் தப்பினர். உடனே இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் எரிந்து சாம்பலானது. நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்து பலரையும் பதற வைத்த நிலையில் விபத்து தொடர்பாக முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
