வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…! செயல்படாத கணக்குகளுக்கு எண்ட் கார்டு…. மினிமம் பேலன்ஸ் இல்லைனா அவ்வளவுதான்…!!

By Devi Ramu on தை 2, 2026

Spread the love

2026 புத்தாண்டு முதல் இந்திய ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ள புதிய விதிமுறைகளின்படி, சரியாகப் பராமரிக்கப்படாத மூன்று விதமான வங்கிக் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படவுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பணப் பரிமாற்றம் செய்யப்படாத ‘டார்மன்ட்’ கணக்குகள் மற்றும் ஓராண்டாகச் செயல்பாட்டில் இல்லாத கணக்குகள் ஹேக்கர்களால் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நிதி மோசடிகளைத் தவிர்க்கவும் இத்தகைய செயலற்ற கணக்குகளைக் கண்டறிந்து மூடுவதற்கு வங்கிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், நீண்ட காலமாகப் பணம் ஏதுமின்றி காலியாக இருக்கும் ‘ஜீரோ பேலன்ஸ்’ கணக்குகளும் புதிய விதிகளின் கீழ் ரத்து செய்யப்படும். உங்கள் கணக்கு முடங்குவதைத் தவிர்க்க, உடனடியாகச் சிறு தொகையையாவது டெபாசிட் செய்தோ அல்லது எடுத்தோ பரிவர்த்தனை மேற்கொள்வதுடன், கேஒய்சி (KYC) விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புத் தொகையைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், டிஜிட்டல் வங்கி முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் இந்த மாற்றங்கள் அவசியமாகின்றன.