புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனிடையே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல ஆண்டுகால போராட்டத்திற்கு நாளை விடிவு காலம் பிறக்க உள்ளதாக கூறப்படுகிறது
. அதாவது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் அவர்களுடன் அமைச்சர்கள் என்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தமிழகமே வியக்கும் வகையில் நாளை பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளன.
