BREAKING: பள்ளிகள் திறப்பு… தமிழக அரசு புதிய அறிவிப்பு…. மாணவர்களுக்கு குட் நியூஸ்….!

By Nanthini on தை 2, 2026

Spread the love

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் டிசம்பர் 23ஆம் தேதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்தன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 24 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை முடிவடைந்து வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகள் இன்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குடிநீர் தொட்டிகள், சத்துணவுக்கூடங்கள் மற்றும் பாத்திரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.பழுதான கட்டிடங்கள், வகுப்பறைகள் பூட்டப்பட்டு, இடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இலவச நோட்டு புத்தகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.