நடன ஆசிரியரும் நில அளவையாளருமான வாலிபர் ஒருவர், திருமணமான ஒரே மாதத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கால்வாயில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில், தாய் மற்றும் மகள் என இருவருமே ஒரே நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்து, சொத்துக்காக இந்த நயவஞ்சகக் கொலையை அரங்கேற்றியது அம்பலமாகி நெட்டிசன்களை உலுக்கியுள்ளது.
கொல்லப்பட்ட தேஜேஸ்வர் என்பவருக்கும் ஐஸ்வர்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா வீட்டை விட்டுத் ஓடிப்போனார். பின்னர் மீண்டும் வந்து, வறுமை காரணமாகவே வீட்டை விட்டுச் சென்றதாகக் கூறித் தேஜேஸ்வரை நம்ப வைத்துள்ளார். அதை உண்மை என நம்பிய தேஜேஸ்வர், அனைத்துத் திருமணச் செலவுகளையும் தானே ஏற்று ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார்.
ஆனால், ஐஸ்வர்யாவிற்கும் அவரது தாயாரிற்கும் ஒரே நபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து தேஜேஸ்வரைத் திருமணம் செய்து, பின்னர் அவரைக் கொன்று அவரது நகைகள் மற்றும் சொத்துக்களைக் கைப்பற்றி வாழத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, திருமணமான ஒரே மாதத்திற்குள் தேஜேஸ்வரைக் கொடூரமாகக் கொலை செய்து கால்வாயில் வீசியுள்ளனர். 5 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. புனிதமான திருமண பந்தத்தையும் மனித உறவுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
