தெலுங்கானா மாநிலம் மேடம் மாவட்டம் சின்ன சங்கரம்பேட்டை மண்டலம் காஜா புறாவை சேர்ந்தவர்கள் பிரவீன் கவுடு மற்றும் அகிலா தம்பதியினர். கூலி தொழிலாளியான இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இதனிடையே பிரவீன் உடல் நலக்குறைவால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திடீரென உயிரிழந்துவிட்டார். இதனால் அகிலா தன்னுடைய தாய் வீட்டுக்கு செல்லாமல் மாமியார் வீட்டிலேயே குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவர் இறந்த சோகத்தில் இருந்த அகிலாவை மற்றொரு திருமணம் செய்து கொள்ளுமாறு அவருடைய மாமியார் கூறியுள்ளார்.
ஆனால் கணவர் உயிரிழந்த துக்கத்திலிருந்து மீண்டு வராமல் இருந்த அகிலா மறுமணத்திற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இப்படியான நிலையில் மனமுடைந்த அகிலா நேற்று முன்தினம் தன்னுடைய குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
