ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி தான் ஸ்டெப்னி பைபர். மாடல் அழகியான இவர் அழகுகளை நிபுணராகவும் இருந்துள்ளார். இதனால் சமூக வலைத்தளத்தில் அவரை இலட்சக்கணக்கான பயனர்கள் பின்தொடர்கின்றனர். இதனிடையே கடந்த நவம்பர் 23ஆம் தேதி இவ்வாறு திடீரென்று மாயமானார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் அவரின் முன்னாள் காதலன் மீது போலீசுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது காதலை கைவிட்ட ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொன்றதாக காதலர் ஒப்புக்கொண்டார்.
அது மட்டுமல்லாமல் ஸ்லோவேனியா எல்லை அருகே சூட்கேசில் வைத்து அவரை புதைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த சூட்கேஸை தோண்டி எடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலைக்கு உதவியாக இருந்த வாலிபரின் தந்தை மற்றும் சகோதரி இடமும் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
