BREAKING: டெல்லியில் இருந்து வந்த உடனே ஓபிஎஸ் அதிரடி…. சற்றுமுன் பரபரப்பு அறிக்கை…!

By Nanthini on மார்கழி 4, 2025

Spread the love

அதிமுகவின் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ் வருகின்ற சட்டசபை தேர்தலுக்காக அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் ஓபிஎஸ்ஐ பாஜக மேலிடம் கண்டு கொள்ளவில்லை. எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸ்ஐ அதிமுகவில் சேர்க்க முடியாது என்ற திட்டவட்டமாக கூறிவிட்டார். சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் முயற்சி செய்தோம் அவரை பார்ப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் உடன் நெருக்கம் காட்டிய நிலையில் அவரை தொடர்ந்து இரண்டு முறை சந்தித்து பேசினார். இதனால் திமுகவில் இணைய போகிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் விஜய் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாற்றினார்.

   

அதன்பிறகு கடந்த ஒரு வாரமாக கோவையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த ஓபிஎஸ் நேற்று திடீர் பயணமாக டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஓபிஎஸ் அமித்ஷாவை சந்தித்தார். அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறினார். ய்விட்டார். அவரைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று ஓபிஎஸ் கூறினார்.

   

இந்நிலையில் அமித்ஷாவை சந்தித்து தமிழகம் திரும்பிய உடனே திமுக அரசை அட்டாக் செய்து அறிக்கை ஒன்றை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். அதில் கடந்த செப்டம்பர் மாதம் நெய் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்தது. ஆனால் தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் மட்டும் ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய விலை பட்டியலை வெளியிடவில்லை. உடனே முதல்வர் தலையிட்டு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அமித்ஷாவை சந்தித்த கையோடு தற்போது ஓபிஎஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.