இரவில் இளம்பெண்ணுக்கு லிப்ட் கொடுத்த 2 வாலிபர்கள்… ஓடும் வேனில் வைத்து 3 மணி நேரம் மாறி மாறி கூட்டு பலாத்காரம்… ஹரியானாவில் பயங்கரம்…!

By Nanthini on மார்கழி 31, 2025

Spread the love

ஹரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இளம் பெண்ணுக்கும் அவருடைய தாய்க்கும் தகராறு ஏற்பட்டதால் இளம் பெண் இரவு தனது தோழி வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது ஒரு வேனில் வந்த இரண்டு வாலிபர்கள் இளம் பெண்ணிடம் தங்கள் அழைத்து செல்வதாக கூறியுள்ளனர். இதனை நம்பி அந்தப் பெண்ணும் வண்டியில் ஏறிய நிலையில் அப்போது அவரிடம் வாலிபர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தடுத்த அந்த பெண்ணை கடுமையாக தாக்கினர். பிறகு ஓடும் வேனில் சுமார் மூன்று மணி நேரம் அந்த இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். சாலையில் இளம்பெண்ணை தூக்கி வீசி விட்டு தப்பிச்சென்றனர் . அதன் பிறகு இளம்பெண் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்களிடம் பெண்ணை வீட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அந்தப் பெண்ணின் முகம் மற்றும் உடல் உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இரண்டு பெயரை கைது செய்துள்ளனர்.