பிரபல அமெரிக்க குணச்சித்திர நடிகர் ஐசியா விட்லாக் ஜூனியர் நேற்று காலமானார். நியூயார்க் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஒரு குறுகிய கால உடல்நலக் குறைபாட்டிற்குப் பிறகு காலமானதாக அவரது மேலாளர் பிரையன் லீப்மேன் உறுதிப்படுத்தியுள்ளார். HBO தொலைக்காட்சியின் ‘தி வயர்‘ தொடரில் ஊழல் அரசியல்வாதியான ‘கிளே டேவிஸ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் உலகம் முழுவதும் பிரபலமானார். அத்தொடரில் அவர் பேசும் “Sheee-it” என்ற வசனம் மிகவும் பிரபலமானது.
பிரபல இயக்குனர் ஸ்பைக் லீயின் 25th Hour, BlacKkKlansman மற்றும் Da 5 Bloods உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். வீப் (Veep), யுவர் ஹானர் (Your Honor) போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் அவர் நடித்துள்ளார்.
