உஷார் மக்களே..! இப்படி புத்தாண்டு வாழ்த்து வந்தால் ஓபன் பண்ணாதீங்க… வாட்ஸ் அப் பயனர்களுக்கு எச்சரிக்கை…!

By Soundarya on மார்கழி 31, 2025

Spread the love
புத்தாண்டு வாழ்த்துகள் என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் வரும் சந்தேகத்திற்கிடமான APK (Android Package Kit) கோப்புகளைப் பயனர்கள் திறக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய கோப்புகள் பெரும்பாலும் “Happy New Year 2026” போன்ற கவரும் பெயர்களில் அனுப்பப்படுகின்றன. பயனர்கள் இவற்றைத் தரவிறக்கம் செய்து நிறுவினால், அவர்களின் கைப்பேசியில் உள்ள குறுஞ்செய்திகள் (OTP), வங்கி விவரங்கள், புகைப்படங்கள் மற்றும் தொடர்பு எண்கள் போன்ற தனிப்பட்ட தரவுகள் திருடப்படும் அபாயம் உள்ளது. 
இந்த மோசடியில், பாதிக்கப்பட்ட ஒருவரின் வாட்ஸ்அப் கணக்கிலிருந்தே அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தகைய லிங்க்குகள் தானாகவே பகிரப்படக்கூடும் என்பதால், தெரிந்தவர்களிடமிருந்து வரும் செய்தியாக இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ‘e-Pay Tax’ அல்லது புத்தாண்டு பரிசுகள் என்ற பெயரில் வரும் செயலிகளைத் தவிர்க்க வேண்டும். சைபர் மோசடியில் சிக்கினால் உடனடியாக 1930 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.