இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில் மக்களை சுலபமாக ஏமாற்றி விடலாம் என்ற நோக்கத்தில் மோசடிக்காரர்கள் ஆன்லைன் மோசடிகளை அதிகளவு செயல்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி தற்போது 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் ஆபத்தான APK கோப்புகள் குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Happy_New_Year.apk என்ற பெயரில் வரும் லிங்குகள் அல்லது கோப்புகளை பயனர்கள் தெரியாமல் கிளிக் செய்தால் அவர்களது செல்போனில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விவரங்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் இது போன்ற சந்தேகத்திற்குரிய மெசேஜ்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
