ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில், உயிரிழந்த தனது தங்கையின் உடலில் இருந்த புழுக்களை அகற்றுவதற்காகவே பிணத்தை எரித்ததாக அண்ணன் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் விஞ்ஞானி ஒருவரின் மகளான லிபிகா குமாரி, கடந்த ஏப்ரல் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் நான்கு நாட்களுக்குப் பிறகு அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசார், பாதி எரிந்த நிலையில் இருந்த லிபிகாவின் உடலை மீட்டனர். இதுகுறித்து அவரது அண்ணன் பிரணவ் போலீசாரிடம் கூறுகையில், தங்கை இறந்த பிறகு உடலில் புழுக்கள் மொய்க்கத் தொடங்கியதால், அவற்றைப் போக்கவே தீ வைத்ததாகக் கூறி அதிர வைத்துள்ளார்.
இருப்பினும், லிபிகாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் நீடிக்கின்றன. அண்ணன் பிரணவ் தனக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறினாலும், அவரது தம்பி பிரத்யுத் தனக்கு எதுவும் தெரியாது என்றும், தான் உடலைப் பார்க்கவே இல்லை என்றும் முரண்பட்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதனால் தந்தை மறைவுக்குப் பிறகு லிபிகா மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் உண்மையில் உடல்நலக்குறைவால் தான் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரர்களின் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்களால் சிக்கலாகியுள்ள இந்த வழக்கின் உண்மைத்தன்மை, பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பிறகே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…
தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400…
நடிகர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா அவருக்கு வாழ்த்து தெரிவிக்காததும், அவரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாக எழுந்த வதந்திகளும்…
சீனாவின் சிச்சுவான் மாகாணத் தெருக்களில் மனிதனைப் போன்ற தோற்றம் கொண்ட 'ஹியூமனாய்டு' ரோபோ ஒன்று மண்டியிட்டு, கைகளைக் கூப்பி பிச்சை…
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் "டாஸ்மாக் கட்சி நிதி" எனக் குறிப்பிட்டதாகக் கூறி திமுக…