ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியில் ஓரினச்சேர்க்கை உறவு மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சோம்யா சாகர் சமால் என்பவரின் மனைவி சுபாஸ்ரீ, தனது தோழி பிரீதியுடன் ஓரினச்சேர்க்கை உறவில் இருந்து வந்ததோடு, பிரீதியின் சகோதரர் தபஸ் என்பவருடனும் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.
இந்த இரட்டை உறவுகள் குறித்து அறிந்த சோம்யா, அவர்களை எச்சரித்ததால் ஆத்திரமடைந்த தபஸ் மற்றும் சுபாஸ்ரீ ஆகியோர் சோம்யாவைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். இதற்காக தபஸ் தனது நண்பர்கள் உதவியுடன் நாட்டுத் துப்பாக்கி ஒன்றை விலைக்கு வாங்கி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி கடை முடிந்து வீடு திரும்பிய சோம்யாவைச் சுட்டுள்ளார். பலத்த காயமடைந்த சோம்யா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், சுபாஸ்ரீயின் அலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சுபாஸ்ரீ மற்றும் பிரீதிக்கு இடையே ஓரே மாதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை அலைபேசி உரையாடல்கள் நிகழ்ந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய அதிரடி விசாரணையில், இந்தக் கொலையில் மனைவி சுபாஸ்ரீ, அவரது கள்ளக்காதலன் தபஸ், தோழி பிரீதி மற்றும் துப்பாக்கி வழங்கிய இருவர் என மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…