ஹோட்டலில் வாலிபருடன் அறை…! மர்மமாக இறந்து கிடந்த இளம்பெண்… 2 பெயர்களால் நீடிக்கும் மர்மம்…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 30, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் எஸ்.ஆர்.நகர் பகுதியில் உள்ள ‘கோகுல் பிரைடு’ OYO ஹோட்டல் அறை எண் 103-ல், இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சி. கணேஷ் என்ற பெயருடைய வாலிபர் ஒருவருடன் அந்த இளம் பெண் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். மறுநாள் காலையில் அந்த அறையில் பெண் பிணமாகக் கிடப்பதைக் கண்டு ஹோட்டல் நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இறந்து கிடந்த பெண்ணின் ஆதார் கார்டில் ‘துர்கா’ என்று பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

   

ஆனால், முன்னதாக கணவர் அடித்ததாக கூறி காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அப்பெண் ‘சிரிஷா’ என்ற பெயரில் பதிவு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவனின் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட அப்பெண் OYO அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தற்போது போலிஸார் ஹோட்டலின் சிசிடிவி பதிவுகள் மற்றும் அறைப் பதிவேடுகளைக் கைப்பற்றி, உடனுடன் தங்கியிருந்த கணேஷைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.