“EPS என்னை தூக்கியதுதான் எனக்கு கிஃப்ட்”…. தாராபுரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உடைத்த சீக்ரெட்…. அலறும் அரசியல் களம்….!

By Nanthini on புரட்டாதி 30, 2026

Spread the love

அதிமுகவில் இருந்து தங்களை வெளியேற்றிய நிகழ்வு, தங்களின் அரசியல் வாழ்வுக்கு ஒரு பெரும் நல்வாய்ப்பாக அமைந்தது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தாராபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், எடப்பாடி பழனிசாமி தங்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியவுடனே, தவெக தலைவர் விஜயை சந்தித்து இணைந்ததாகக் கூறினார். தங்களை தவெக தலைமை அரவணைத்து, அரசியல் முகவரி வழங்கி உயர்த்தியதால் தான் இன்று அமைச்சராகப் பணியாற்ற முடிவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மேலும் வேட்பாளர் சத்யபாமாவுக்கு எதிராக அதிமுகவினர் இடையே அதிருப்தி நிலவி வருவதாகக் சுட்டிக்காட்டிய அமைச்சர், அவரை ‘துரோகி’ என அதிமுகவினரே விமர்சித்து வருவதை மேடையில் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது காரசாரமான விமர்சனங்களை முன்வைத்த அவர், எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கும், அவரை நம்பியவர்களுக்கும் தொடர்ந்து துரோகம் மட்டுமே செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.