மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், மூன்று துண்டுகளாக வெட்டப்பட்ட பாம்பு இரண்டு முறை கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் ஆச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நௌடண்டா கிராமத்தில் பாரதி குஷ்வாஹா(18) என்ற இளம்பெண் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதுபோன்ற ஒரு சம்பவத்தை தாங்கள் பார்ப்பது இதுவே முதல் முறை என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
பாரதி குஷ்வாஹா வீட்டில் மின்சார இயந்திரம் மூலம் தீவனம் வெட்டிக் கொண்டிருந்தார். தீவனத்தில் சிக்கிய ஒரு பாம்பு மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டது. சிறுமி தீவனத்தில் கையை வைத்தவுடன், பாம்பின் துண்டிக்கப்பட்ட பாகங்கள் அவளை இரண்டு முறை கடித்தன. பாம்பு கடித்த சிறிது நேரத்திலேயே, பாரதி மயக்கமடைந்து தரையில் விழுந்தார். பின்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
