பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் கட்சியின் விதிகளுக்கு புறம்பாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அன்புமணி பதிலளிக்காததால் அவரை கட் செய்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் ராமதாஸ் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கட்சியின் புதிய செயல் தலைவராக தன்னுடைய மூத்த மகள் காந்திமதியை ராமதாஸ் நியமித்தார்.
இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி கூட்டணியை உருவாக்குவேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், பாமகவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார். திமுகவுடன் கூட்டணியா என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பியதற்கு போக தான் தெரியும் என்றும் கூறினார். தந்தை மற்றும் மகனிடையே மோதல் நீடித்து வரும் நிலையில் அதிமுக, அன்புமணியுடன் கூட்டணிக்கு நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
