ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை இவர்களுக்கெல்லாம் கிடையாது… சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்..!

By Nanthini on ஐப்பசி 26, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளால் சுமார் 1.15 கோடி பெண்கள் மட்டுமே பயனடைந்து வந்தனர். மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத குடும்பங்களின் அதிருப்தியை குறைக்கும் நோக்கத்தில், அரசு தற்போது பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக புதிதாக சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த விண்ணப்பதாரர்களில் வருமான வரி செலுத்தும் குடும்பங்களை சேர்ந்தவர்களை தவிர்த்து மற்ற தகுதியுள்ள பெண்களுக்கு உரிமை தொகை வழங்குவதற்கு நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்ட மன்றத்தில் அறிவித்தபடி இந்த புதிய பயனாளிகளுக்கு டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.

   

இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வை நவம்பர் மாதத்திற்குள் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. குடும்ப வருமானம் உள்ளிட்ட தகவல்களை மறைத்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அண்மையில் அரசு பணியில் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது. விண்ணப்பித்தவர்களின் ரேஷன் கார்டில் சரியான முகவரி இல்லை என்றாலும் ஆயிரம் ரூபாய் கிடைக்காது என கூறப்படுகிறது.