தஞ்சாவூர் மாவட்டம் மண்ணிக்கரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 2-வது மகள் ஷாலினி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று ஷாலினி திருப்புறம்பியம் செல்வதற்காக அரசு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தை தவறவிட்டதால் புதுக்கண்டி படுகை கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றார்.
அப்போது திருவேற்காடு நோக்கி வந்த தனியார் பள்ளி வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஷாலினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷாலினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
