சென்னை தி நகரில் திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்தக் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வாக்குறுதி கொடுத்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றிவிட்டார் என்பதுதான் உண்மை. வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் எடப்பாடி எங்களை ஏமாற்றி விட்டார். மாநிலங்களவை சீட் தருவதாக கூறி முதுகில் குத்திவிட்டார்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை. அதனைப் போலவே தேமுதிகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார். அதனால்தான் நாங்கள் ஏமாந்தோம். எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார கூட்டங்களுக்கு காசு கொடுத்த தான் ஆட்கள் அனைத்துவரப்படுகின்றனர் என்றெல்லாம் பேசியிருந்ததாக தகவல் வெளியானது. இது எடப்பாடி தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது . இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா, “அண்ணன் எடப்பாடியார் முதுகில் குத்திவிட்டதாக சொல்கிறார்கள். நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக தொலைக்காட்சிகளில் செய்தி பரவுகிறது. அது தவறான விஷயம். அந்த வார்த்தை என் வாயில் வரவே வராது” என்று கூறியுள்ளார்.
