சற்றுமுன் பரபரப்பு: கூட்டணிக்கு TTV-க்கு அழைப்பு விடுத்த விஜய்..? திடீர் திருப்பம்..!!

By Soundarya on புரட்டாதி 4, 2025

Spread the love

NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று அமமுகவின் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். துரோகம் தலை விரித்து ஆடுவதாக குற்றம் சாட்டிய அவர் கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். இனிமேல் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிப்பை டிசம்பர் மாதத்தில் வெளியிட இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஓபிஎஸ்ஐ தொடர்ந்து டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன், ஓபிஎஸ்  உடன் இணைந்து, விஜய்யின் TVKவுடன் டிடிவி கூட்டணி வைக்கலாம் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் தான் அவரின் கூட்டணி விலகல் செய்தியை TVKவினர் பகிர்ந்து வருகின்றனர். இது டிடிவியை தவெக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் சமிக்ஞை போல் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.