உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள ரஹன்கலான் கிராமத்தில், நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த ஜோடி ஒரே அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த இந்திராவதி என்ற இந்து (20) மற்றும் பிரீதம் (22) ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், வாலிபர் பிரீதமிற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், இவர்களது காதலுக்குப் பல்வேறு எதிர்ப்புகள் இருந்துவந்துள்ளன.
இந்நிலையில், நேற்றிரவு காதலியின் வீட்டில் உள்ள ஒரு அறையில், இருவரும் ஒரே துப்பட்டாவால் தூக்குப் போட்டுக்கொண்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் சடலங்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபரின் குடும்பத்தினர் இது தற்கொலை அல்ல, கொலை எனச் சந்தேகமும் குற்றச்சாட்டும் எழுப்பியுள்ளதால், இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
