தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… 300 பவுன் நகை… வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை… மதுரையை அதிரவைத்த சம்பவம்…!

Spread the love

மதுரை செல்லூரில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வரதட்சணை கொடுமையால் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. ரூபன் ராஜ் மற்றும் பிரியதர்ஷினி தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில் திருமணத்தின்போது மணமகன் வீட்டார் வரதட்சணையாக 300 பவுன் நகை கேட்டுள்ளனர். ஆனால் பெண் வீட்டார் 150 பவுன் நகை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் 150 பவுன் போதாது, மேலும் 150 பவுன் தர வேண்டும் என்று கேட்டு மணமகன் வீட்டார் பிரியதர்ஷினியை கொடுமை செய்துள்ளனர். இந்த பிரச்சனையில் ரூபன் ராஜ் மற்றும் பிரியதர்ஷினி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சம்பவத்தன்று பிரியதர்ஷினி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வரதட்சணை கொடுமையால் தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதாக பிரியதர்சனியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியதர்ஷினியின் கணவர் ரூபன் ராஜ், மாமனார் மற்றும் மாமியாரை கைது செய்துள்ளனர்

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

8 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

8 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

8 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

9 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

9 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

9 மணத்தியாலங்கள் ago