சிலிண்டர் விலை முதல் கிரெடிட் கார்டு வரை… இன்று (செப்..1) முதல் எல்லாமே மாறிடுச்சு… அமலுக்கு வந்த புதிய மாற்றங்கள் என்னென்ன…?

Spread the love

பொதுவாகவே ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிதி சார்ந்த பல மாற்றங்கள் அவனுக்கு வருவது வழக்கம். அதன்படி செப்டம்பர் 1 இன்று முதல் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

கிரெடிட் கார்டு:

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தன்னுடைய கிரெடிட் கார்ட் தொடர்பான விதிகளில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி செப்டம்பர் 1 இன்று முதல் டிஜிட்டல் கேமிங் பிளாட்பாரங்கள், சில வணிகர்கள் மற்றும் அரசாங்க பரிவர்த்தனைகளுக்கு செய்யப்படும் செலவுகளுக்கு ரிவார்டு பாயிண்ட் வழங்கப்படாது.

வெள்ளி நகை ஹால்மார்க்:

வெள்ளி நகைகளின் தூய்மை குறித்த புதிய விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. தொடக்கத்தில் இது விருப்பத்திற்குரியதாக இருக்கும். வாடிக்கையாளர்கள் விரும்பும் ஹால்மார்க் நகை வாங்கலாம் அல்லது சாதாரண நகை வாங்கலாம்.

சிலிண்டர் விலை:

மாதத்தின் முதல் நாளான இன்று 19 கிலோ எடை கொண்ட வடிவ பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.51.50 குறைந்து ரூ.1,738 விற்பனை செய்யப்படுகிறது.

அஞ்சலக சேவை:

அஞ்சலகத்தில் முக்கியமான மாற்றம் ஒன்று ஏற்பட உள்ளது. அதாவது இன்று முதல் பதிவு அஞ்சல் தனியாக இல்லாமல் ஸ்பீடு போஸ்ட் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனுப்பும் பதிவுகள் அனைத்தும் ஸ்பீடு போஸ்ட் மூலம் மட்டுமே அனுப்பப்படும். தனி சேவை என பதிவு அஞ்சல் இனி கிடையாது.

வருமான வரி தாக்கல்:

வருமான வரித்துறை இந்த முறை வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூலை 30 இல் இருந்து செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. எனவே செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் அபராத நோட்டீஸ் வரக்கூடும்.

ஓய்வூதிய திட்டம்;

தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுப்பதற்கு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

7 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

7 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

8 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

8 மணத்தியாலங்கள் ago